வாசகர் பகுதி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின ;வாசகர் பகுதி இன்றைய தினம் (நவம்பர் 01) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டபோதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாசகர் பகுதி இன்றைய தினம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் அமையப்பெற்றிருக்கும் இந்நூலகமானது பல செயற்பாடுகளுடன் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.


தற்போது சனசமூக நிலையத்தின் குறிப்பிட்ட கட்டிடப்பகுதிகள் கடற்படையினர் வசமுள்ளதுடன் மிகுதி பகுதியே சனசமுக நிலைய நிர்வாகத்திடம் காணப்படுகின்றது. மிக விரைவில் நூல் இரவல் விழங்கும் பகுதியினையும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article