வவுனியா வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் விதை உற்பத்திப் பண்ணைக்கு அண்மையில் ஏ-9 வீதியில் நேற்று(ஜூலை 5) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா, குருமன்காட்டைச் சேர்ந்த சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் (வயது-24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

ஹைஏஸ் வாகனமும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின. மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற இளைஞர், வவுனியா நோக்கிப் பயணித்த ஹைஏஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் 600 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் சம்பந்தப்பட்ட மூன்று வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Share this Article