வவுனியா தோணிக்கல் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் இன்று(ஓகஸ்ட் 3) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் பிறந்தநாள் நிகழ்வொன்று இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கும் தீ வைத்தனர்.

இதன்போது, 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பணத்தை வழங்கி கொலை செய்யுமாறு பணித்த, பிரதான சந்தேகநபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article