வவுனியா சிறைக் கைதி மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை (ஜனவரி 4) உயிரிழந்தார்.

முல்லைத்தீவு, மாவில்வத்தைகண்டியைச் சேர்ந்த 62 வயதுடைய இ.சேகர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் நடந்த குற்றச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Share this Article