வவுனியா இரட்டைக் கொலைச் சம்பவம்! – மூவருக்குப் பிடியாணை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவரும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றம் நேற்று(செப்ரெம்பர் 7) பிடியாணை பிறப்பித்தது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட விவகாரத்தில் மூச்சுத்திணறலால் இளம் குடும்பப்பெண் ஒருவரும், படுகாயமடைந்து சிகிச்சை பயனின்றி அவருடைய கணவனும் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பில் ஆறு பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலும், புலன் விசாரணைகளின் அடிப்படையிலும் மேலும் மூவர் சந்தேகநபர்களாகத் தேடப்படுகின்றனர்.

இந்த வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வழக்கு அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 21ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டது.

Share this Article