வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (ஜூன் 28) முற்பகல் வெளியில் சென்றுவிட்டு பிற்பகல் வீடு திரும்பியிருந்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article