வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 8) இரவு  வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி விளக்குவைத்த குளத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த விபத்தில் கண்டியைச் சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் உத்தியோகத்தருமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article