முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா எதிர்வரும் மே20 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டசெயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.
ஆலயப் பொங்கல் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு முன்னாயத்தகலந்துரையாடல் நேற்றையதினம் (ஏப். 24) முல்லைத்தீவு மேலதிக மாவட்டஅரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற வைகாசி மாதம் 6ஆம் திகதி பாக்குத் தெண்டல் நிகழ்வும் 13ஆம் திகதிதீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் 20 ஆம் திகதி வைகாசிப் பொங்கல் நிகழ்வும்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட பிரதம கணக்காளர் திரு.ம.செல்வரட்ணம், , கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ம.உமாமகள், மாவட்டஉள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், முல்லை வலயக்கல்வி பணிமைனையின் உதவிப் பணிப்பாளர், மின்சாரசபையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், ஆலயநிர்வசாக்த்தினர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரி, மாவட்ட பொலிஸ்பொறுப்பதிகாரி, மாவட்ட த்தின் முப்படை அதிகாரிகள், ஏனையஉத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.