கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர், விசாரணை கூண்டில்உயிர் மாய்த்து கொண்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர், இன்றைய தினம் (ஜூலை25) குடும்பப் பிணக்கு தொடர்பாகவிசாரணைகளுக்காக அழைத்து வரப்பட்டு பொலிஸ் நிலையத்தின் விசாரணைகூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் 12.0 0 மணிஅளவில் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியை கிழித்து தூக்கிட்டு உயிர்மாய்த்து கொண்டுள்ளார். 

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் ராசு என்ற 66 வயதுடைய குறித்தசந்தேக நபர், கிளிநொச்சி தொடருந்து நிலைய வீதியைச் சேர்ந்தவர் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Share this Article