கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக்கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும்30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள்திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக்கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவைஇடைநிறுத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரிக்கைப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சையானது எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம்குறிப்பிட்டுள்ளது.

Share this Article