வற்றாப்பளை ஆலயத்தின் வைகாசிப் பொங்கலை முன்னிட்டு முன்னாயத்தக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா எதிர்வரும் 05 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

ஆலயப் திருப்பணி வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று (ஜூன் 2) பதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட பிரதம கணக்காளரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தற்போதைய பெறுனருமான திரு.ம.செல்வரட்ணம், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ம.உமாமகள், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article