வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளங்­க­ளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 5 ஆயி­ரத்து 764 ஏக்­கர் காணி­கள் வன­வள மற்­றும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளங்­க­ளின் ஆளு­கை­யில் உள்­ளன.

மக்­க­ளின் வதி­வி­டங்­கள், வயற்­கா­ணி­கள், ஏனைய அபி­வி­ருத்­திக்­கான காணி­கள் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் வன­வ­ளத் திணைக்­க­ளம் மற்­றும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம் என்­ப­வற்­றின் ஆக்­கி­ர­மிப்­பில் உள்ள பொது­மக்­க­ளின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் ஒன்று கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் திரு­மதி றூப­வதி கேதீஸ்­வ­ரன் தலை­மை­யில் நேற்று (பெப்ரவரி 22) நடை­பெற்­றது.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் கரைச்சி, கண்­டா­வளை, பச்­சி­லைப்­பள்ளி, பூந­கரி பிர­தேச செய­லர்­கள், வன­வள மற்­றும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர்.

இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் கருத்­துத் தெரி­வித்த கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் தெரி­வித்­த­தா­வது,
ஜனா­தி­பதி செய­ல­கத்­தின் சமூக விவ­கா­ரப் பணிப்­பா­ளர் நாய­கம் இந்த விட­யம் தொடர்­பில் ஆராய எமது மாவட்­டச் செய­ல­கத்­துக்கு வந்­தி­ருந்­த­து­டன், களப் பய­ணம் ஒன்­றை­யும் மேற்­கொண்­டி­ருந்­தார். அதன் தொடர் நட­வ­டிக்­கை­யா­கவே கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

வன­வ­ளத் திணைக்­க­ளத்­துக்­கும், வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­கும் உட்­பட்ட காணி­க­ளில் பொது­மக்­கள் தேவைக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் காணி­கள், எதிர்­வ­ரும் காலங்­க­ளில் அபி­வி­ருத்­திக்­குத் தேவை­யான காணி­கள் என்ற அடிப்­ப­டை­யில் காணி­களை விடு­விப்­பது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டல் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வரு­கின்­றது– என்றார்.

Share this Article