கடந்த இரண்டு வருடங்களாக உதவி பிரதேசசெயலராக மற்றும் பிரதேசசெயலராக பணியாற்றி வடபிராந்திய பிரதி தாபால்மா அதிபராக பதவியுயர்வுபெற்று செல்லும் திருமதி நிவேதிகா கேதீசன் அவர்களது சேவையினை பாராட்டி வாழ்த்தும் சந்திப்புக்கள் இன்று (ஓகஸ்ட்27) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நன்றிகளையும் வாழ்த்துக்களையும் செலுத்தும் விதமான சந்திப்பை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப. பத்திநாதன் அடிகளார் மற்றும் அருட்பணி சோபன்றூபஸ் அடிகளார் ஆகியோர் இன்று மேற்கொண்டிருந்தனர்.

பிரதேசசெயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பணிகளிலும் வளர்சியிலும் பிரதேசசெயலர் ஆற்றிய பணிகளையும் விசேடமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கச்சதீவு திருவிழாக்களில் காட்டிய அர்பணிப்புமிகு பணியையும் பிரதேச மக்களின் நலன்சார்ந்து முன்னெடுத்த பணிகள் எப்போதும் பாராட்டுதற்குரியதெனவும் வாழ்த்தி மென் மேலும் பதவி உயர்வுகளை பெறவும் வாழ்வு இறையாசீரில் சிறக்கவும்ஆசித்தார்.

இதேவேளை பிரதேசசெயலர் அவர்கள் நாளைய தினம் தனது பணிகளிலிருந்து விடுகைபெற்று எதிர்வரும் திங்கள் தனது புதிய பொறுப்புக்களை ஏற்கவுள்ள நிலையில், மரியாதை மற்றும் நன்றியின் நிமித்தம் இலங்கை பெண்கள்பணியகத்தினால் பதிவு செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச மகளிர் விவகாரஅமைப்புக்களின் பிரதேச செயலாளரை சந்தித்து பிரியாவிடை நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.