வடக்குக்கான ரயில் சேவைகளில் நாளை ஏற்பட்டுள்ள மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்குக்கான ரயில் சேவைகள் அனைத்தும் நாளை (ஜனவரி 5) கொழும்பு கோட்டை முதல் அநுராதபுரம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா முதல் அநுராதபுரும் வரையான ரயில் பாதைத் திருத்தப் பணிகள் காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில் சேவைக்காக நேரங்கள் வருமாறு-

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு

  • உத்தர தேவி காலை 09.15
  • யாழ்தேவி மாலை 14.00
  • குளிரூட்டப்பட்ட கடுகதி மாலை 16.32
  • இரவு தபால் இரவு 23.10
  • ரஜரட்டரெஜின காலை 05.00

கல்கிசை அல்லது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அநுராதபுரத்துக்கான ரயில் சேவைகள் வழமையான நேரங்களில் புறப்படும்.

கல்கிசை கொழும்பு கோட்டையில் இருந்து

  • ரஜரட்டரெஜின மதியம் 13.15
  • உத்தர தேவி காலை 11.30
  • யாழ்தேவி காலை 06.30 (கல்கிசை 05.50)
  • A/C கடுகதி காலை 05 45( கல்கிசை 05.10)
  • இரவு தபால் இரவு 20.00
Share this Article