வடக்குகிழக்கு தமிழ் எம்.பிக்களை நாளை அவசரமாக சந்திக்கவுள்ள ஜனாதிபதி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை(டிசம்பர் 13) புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அன்று பிற்பகல் 3 மணிக்கு வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்தித்து பேசவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.

நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடுவதற்கு இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைப்புக் கடிதத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்புக் கடிதங்கள் சகல தமிழ்த் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை இடம்பெற உள்ள நிலையில் அவசரமாக விடுக்கப்பட்டுள்ள இந்த சந்திப்பு தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share this Article