வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று(டிசம்பர் 1) திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த புயல் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு – வடமேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தென் மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share this Article