லாண்ட் மாஸ்ரருக்குள் அகப்பட்டு 4 வயதுச் சிறுமி மரணம் – புதுக்குடியிருப்பில் சோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் 4 வயதுச் சிறுமி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (மே 26) மாலை நடந்துள்ளது.

சிறுமியின் அயல்வீட்டுக்காரர் விறகு ஏற்றிய லாண்ட் மாஸ்ரரை பின்புறமாக இயக்கியபோது, சிறுமி அதற்குள் அகப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

சிறுமி நிற்பதை அறியாத அயல்வீட்டுக்காரர் லாண்ட் மாஸ்ரரைப் பின்புறம் நகர்த்தியுள்ளார். அதன்பின்னர் மீண்டும் அதை முன்புறம் நகர்த்தி வீட்டுக்குள் செலுத்தியுள்ளார். அப்போது சிறுமி தலை, காது, கால்களில் இரத்தம் வழிந்தோட வீழ்ந்து கிடப்பதை அவதானித்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆயினும் சிறுமி மருத்துவமனை கொண்டு செல்ல முன்னரே உயிரிழந்துள்ளார். சிறுமியின் உடல் உடல்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

லாண்ட் மாஸ்ரரைச் செலுத்தியவர் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Article