ரயில் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ரயில்வே அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

15 எஞ்சின்களும் 31 இயந்திரத் தொகுதிகளும் திருத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இந்திபொலகேவிடம் வினவிய போது, எஞ்சின்கள் மற்றும் இயந்திரத் தொகுதிகளை பழுதுபார்ப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்கள் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக கூறினார்.

Share this Article