ரம்ழானை முன்னிட்டு நயினாதீவில் நடைபெற்ற இறுதிநாள் விளையாட்டுக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நயினாதீவில் ரம்ழான் பெருநாளையொட்டி நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் விளையாட்டுக்களும் பரிசளிப்பு விழாவும் இன்று (ஏப்ரல் 30) இஸ்லாமியக் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையமும், இஸ்லாமிய விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்த விளையாட்டுப் போட்டியை நடாத்துகின்றன.

வலைப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் மற்றும் சிறுவர்களுக்கான போட்டி என்பன இன்றைய இறுதி நிகழ்வை அலங்கரித்தன.

இன்றைய போட்டிகள் மற்றும் ஏற்கனவே இடம்பெற்ற மென்பந்தாட்டப் போட்டி, கரப்பந்தாட்டப் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்றோருக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.

Share this Article