மோட்டார் சைக்கிளில் விரட்டி துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் நடந்தது என்ன?

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளிநொச்சியில் காரில் பயணித்தவர்கள் மீது உள்ளூர் துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையல் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, திருநகரைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற 38 வயதுடையவரே காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.40 மணியவில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நடந்துள்ளது. காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாகவே இந்தத் துப்பாக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

Share this Article