நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையமும், சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றமும் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வுகள் மே 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.
தொழிலாளர்களை மேன்மைப்படுத்தும் வகையில் மரதன் ஓட்டப்போட்டி, நீச்சல் போட்டி, தெப்பம் வலித்தல் போட்டி என்பன இடம்பெறவுள்ளது.
இடம்பெறவுள்ள போட்டி விபரம் ;
01. ஆண்களுக்கான மரதன் –
01.05.2026 வெள்ளி காலை 6.00 மணிக்கு நெடுந்தீவு மேற்கு பெரியதுறையில் ஆரம்பமாகி மாவிலியில் அமைந்துள்ள
தனிநாயகம் அடிகளாரின் சிலையை சுற்றி வந்து சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்கில் முடிவடையும்.
02. பெண்களுக்கான மரதன் –
01.05.2026 வெள்ளி காலை 6.15 மணிக்கு நெடுந்தீவு பூண்டி மாதா கெபியில் ஆரம்பமாகி மாவிலியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலையை சுற்றி வந்து சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்கில் முடிவடையும்.
03. ஆண்களுக்கான நீச்சல் –
01.05.2026 வெள்ளி காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு காளா முனையில் ஆரம்பமாகி சென் அன்ரனிஸ் சனசமுக நிலைய கடற்கரையில் முடிவடையும்.
04. ஆண்களுக்கான தெப்பம் வலித்தல் –
01.05.2026 வெள்ளி காலை 10.30 மணிக்கு நெடுந்தீவு காளா முனையில் ஆரம்பமாகி சென் அன்ரனிஸ் சனசமுக நிலைய கடற்கரையில் முடிவடையும்.
போட்டியில் பங்குபற்றும் வீர வீராங்கனைகள் மருத்துவ பரிசோதனையினை 30.04.2026 அன்று நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் மேற்கொண்டு அவ் அறிக்கையுடன் போட்டிகள் ஆரம்பமாகும் இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருகைதருமாறு நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையம் மற்றும் சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.