மென்பந்து சுற்றுப்போட்டியில் காவலூர் சிறுத்தைகள் அணி வெற்றி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புங்குடுதீவு ஜனசக்தி சனசமூக நிலையமும் புங்குடுதீவு வொறியஸ் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் தீவக ரீதியான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டியின் ஐந்தாவது போட்டியில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டு கழக அணியை எதிர்த்து செட்டிபுலம் ஐயனார் விளையாட்டு கழகம் மோதியது.

நாணயச்சுழற்சியில் காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று களத்தடுப்பை தீர்மானித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செட்டிபுலம் ஐயனார் அணி 8 பந்து பரிமாற்றம் நிறைவில் 5 இலக்குகள் இழப்பிற்கு 60 ஓட்டங்களை பெற்றனர்.

61 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நோக்கில் முனைப்புடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காவலூர் சிறுத்தைகள் அணி 7 பந்து பரிமாற்றம் நிறைவில் 7 இலக்குகள் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இப்போட்டியில் சிறந்த வீரராக ஜெலக்ஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

Share this Article