மென்பந்து சுற்றின் இறுதி போட்டியில் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி வெற்றி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புங்குடுதீவு ஜனசக்தி சனசமூக நிலையமும் புங்குடுதீவு வொறியஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் தீவக ரீதியான தலைவர் கிண்ணம் மாபெரும் மென்பந்து சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து அனலைதீவு லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகம் மோதியது.

இறுதியில்  அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி 8 பந்து பரிமாற்றம் நிறைவில் 8 இலக்குகள் இழப்பிற்கு 47 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

நாணயச் சுழற்சியில் அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் அணி 8 பந்து பரிமாற்றம் நிறைவில் 8 இலக்குகள் இழப்பிற்கு 47 ஓட்டங்களை பெற்றனர்.

48 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நோக்கில் முனைப்புடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
அனலைதீவு லக்கிஸ்ரார் அணி 8 பந்து பரிமாற்றம் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

இறுதி போட்டிக்கான சிறந்த வீரராக தீபன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

Share this Article