மென்பந்து சுற்றின் ஆறாவது போட்டியில் மங்கும்பான் நண்பர்கள் அணி வெற்றி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தீவக ரீதியான மாபெரும் மென்பந்து சுற்றுப் போட்டியின் 2 ஆவது நாளின் ஆறாவது போட்டியில் புங்குடுதீவு வொறியஸ் விளையாட்டு கழக அணியை எதிர்த்து மங்கும்பான் நண்பர்கள் விளையாட்டுக் கழகம் மோதியது.

புங்குடுதீவு ஜனசக்தி சனசமூக நிலையமும் புங்குடுதீவு வொறியஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்த மென்பந்து சுற்றுப்போட்டியை நடாத்துகின்றது.

நாணயச் சுழற்சியில் வொறியஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று களத்தடுப்பை தீர்மானித்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மங்கும்பான் நண்பர்கள் அணி 8 பந்து பரிமாற்றம் நிறைவில் 2 இலக்குகள் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்றனர்.

58 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நோக்கில் முனைப்புடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வொறியஸ் அணி
8 பந்து பரிமாற்றம் நிறைவில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தேல்வி பெற்றது .இப்போட்டியில் சிறந்த வீரராக விதுசன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

Share this Article