முல்லையடி விபத்தில் சிறுவன் பரிதாபச் சாவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பளை, முல்லையடியில் ஏ-9 வீதியில் நேற்று(ஜூலை 5) புதன்கிழமை இரவு நடந்த விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முல்லையடியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் ஜதுர்சிகன் (வயது-12) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வீதியின் பக்கம் மாறுவதற்காக வீதியின் ஓரம் சைக்கிளுடன் காத்திருந்த சிறுவனை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனம் மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பளைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article