முல்லைத்தீவில் நாளை “மலையகத் தமிழர்களுடைய 200 வருட வரலாறு” நூல் அறிமுகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நாளை(ஓகஸ்ட் 20) ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு விழா ஒன்றின் மூலமாக “மலையகத் தமிழர்களுடைய 200 வருட வரலாறு” நூல் மக்களிடையே அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை மலையகத் தமிழர்களுடைய 200 வருட வரலாறு என்ற நூலை வவுனியா கணேசபுரத் தை சேர்ந்த கலாபூஷணம் இரா சுப்பிரமணியம் அவர்கள் எழுதி கடந்த மாதம் வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் சிவில் சமூக செயல்பாட்டார்களும் பொதுமக்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share this Article