முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஒக்ரோபர் 4) இரவு 8.30 மணியளவில் கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு இடியன் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

சம்பவத்தின் போது சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share this Article