முல்லைத்தீவில் சிக்கிய அரியவகை விலங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அரிய வகை உயிரினமான அழுங்கு ஒன்று முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றுக்குள் புகுந்த அழுங்கை வீட்டிலிருந்தவர்கள் கண்டதை அடுத்து, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அழுங்கை மீட்டு்ச சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட அழுங்கு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அழுங்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் காடுங்களில் காணப்பட்டாலும், தற்போது அந்த இனம் அருகிவரும் விலங்கினமாக மாறியுள்ளது.

Share this Article