முல்லைத்தீவில் இ.போ.ச பஸ் மீது கல் வீச்சுத் தாக்குதல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ.ச பஸ் வண்டி மீது இன்று (ஏப்ரல் 25) அதிகாலை முல்லைத்தீவு, செல்வபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கல் வீச்சுத் தாக்குதல் காரணமாக பஸ்சாரதி காயமுற்றதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் இன்று தமிழ் முஸ்லிம் கட்சிகள் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அப் பிரதேசங்கள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.

இ.போ.ச பஸ் வண்டி இன்று அதிகாலை முல்லைத்தீவிலிருந்து ஏ-30 வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்வபுரம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ் மீது கல் வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பஸ் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் காரணமாக பஸ் வண்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சாரதி காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து முல்லைத்தீவு பொலிசாரின் பாதுகாப்புடன் இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெற்றுவருகின்றன.
.

Share this Article