மாவட்ட பண்பாட்டு விழாவில் நெடுந்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பெருவிழாவில் நெடுந்தீவு பிரதேச செயலகம் சார்பில் நாட்டார் பாடலை பாடி அனைவரையும் வெகுவாக கவரந்திருந்தார் நெடுந்தீவு மண்ணின் மாணவி செல்வி அமலஜயான் அமலஜெனிஷா.

இவரது இப்பாடலானது கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டபிரதேச மட்ட கலை இலக்கிய போட்டிகளில் இரண்டு தடவைகள் முதலாமிடத்தைபெற்றுக்கொண்டதுடன் மாவட்டமட்ட கலை இலக்கிய போட்டிகளில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட  பண்பாட்டுப்பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட   பண்பாட்டுப் பெருவிழா – 2025 நேற்று (ஒக். 03) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில்  – பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

அந்த வகையில் நாட்டார் பாடல் (நெடுந்தீவு பிரதேச செயலகம்) தமிழ் தாய் வாழ்த்து (நல்லூா் பிரதேச செயலகம்),  மங்கல இசை (கரவெட்டி பிரதேசசெயலகம்) வரவேற்பு நடனம் (பருத்தித்துறை பிரதேச செயலகம்) செம்பு நடனம் (வேலணை  பிரதேச செயலகம்) நாதசங்கமம்  (கோப்பாய் பிரதேச செயலகம்)  கும்மி (கரவெட்டி பிரதேச செயலகம்), கரகாட்டம் (மருதங்கேணி பிரதேசசெயலகம்), கிராமியப் பாடல் (உடுவில் பிரதேச செயலகம்), கோலாட்டம்(ஊர்காவற்துறை பிரதேச செயலகம்), வீரபத்திர வசந்தன் (தெல்லிப்பழைபிரதேச செயலகம்), தசாவதார நடனம் (பருத்தித்துறை பிரதேச செயலகம்),   இஸ்லாமிய நடனம்  (யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்), இராவணன் கூத்து (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்) என்பன சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article