மாணவர் பசியாற்றல் திட்டம் வேலணை மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

“தீவக ஒளி” சமூகசேவை நிலையம் வேலணை அமைப்பினர் “மாணவர் பசியாற்றல்” திட்டத்தினை நேற்று(ஓகஸ்ட் 31) வேலணை மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைத்துள்ளனர் பல்வேறு காரணங்களால் காலை உணவை தவறவிட்டு பாடசாலை வரும் மாணவர்களின் பசியாற்ற இத்திட்டம் வழிவகுத்துள்ளது.

நிகழ்வில் அயற்பாடசாலை யா/வேலணை சைவபிரகாச வித்தியாலய அதிபர் நடராஜா வாகீசன் அவர்கள் விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தை நடைமுறை செய்ய பங்களிப்பை வழங்கும் “தீவக ஒளி” அமைப்பின் உறவுகளுக்கும், பாடசாலையில் திட்டத்தை முன்னெடுக்கும் பாடசாலையின் உணவூட்டல் முகாமைத்துவ குழுவினருக்கும் கல்லூரிச் சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.

Share this Article