மறைந்த விபுலானந்தன் நினைவுக் கோப்பை கூடைப்பந்தாட்டப் போட்டி ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியின் சிறந்த மாணவனும் உதவி மாணவ முதல்வனுமாகிய பொன்.விபுலானந்தனின் ஞாபகார்த்தமாக அவருடன் கல்வி கற்ற 1988
க.பொ.த உயர்தர மாணவர் அணியினரின் அனுசரனையுடன் வருடாவருடம் மாணவர் முதல்வர் சபையினரால் கூடைப்பந்தாட்ப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.

இம்முறை 88 ஆவது மாணவர் முதல்வர் சபையால் நடாத்தப்படும் கூடைப்பந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று(ஒக்ரோபர் 20) நடைபெற்றது.

முதலாவது போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகள் மோதின. இதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article