மருதமடு அன்னையை வரவேற்க அலைகடல் என திரண்ட நெடுந்தீவு மக்கள் – விழாக்கோலம் கொண்ட நெடுந்தீவு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மருதமடு அன்னையின் நெடுந்தீவுக்கான திருப்பயணம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்21) காலை 9.45 மணிக்கு கடற்படை படகு மூலம் நெடுந்தீவு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்நிலையில் நெடுந்தீவு பிரதேசம் விழாக்கோலம் கொண்டுள்ளதுடன் விசேடமாக அமைக்கப்பட்ட திருச்சொரூப ஊர்தி மூலம் குதிரைகளின் அணிவகுப்புடன்  பிரதான வீதி ஊடாக பக்தர்கள் அணிவகுத்து செல்ல புனித யுவானியார் ஆலயம் நோக்கி சென்று கொண்டுள்ளது.

வீதியின் இருமருங்கும் நிறைகுடங்கள் வைத்து மக்கள் ஆர்வத்துடன் அன்னையின் அருள்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article