மன்னார் பாலத்தடியில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று(ஓகஸ்ட் 2) ஆண் ஒருவரின் சடலம்
கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கரை ஒதுங்கிய சடலம் நீலநிற சாரம் ,அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற ரிசேட் அணிந்த
நிலையில் காணப்படுகின்றது.

இராணுவம் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article