மன்னாரில் 2.15 கிலோ தங்கத்துடன் ஐந்து பேர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார், ஒழுதுடுவாய் கடற்பரப்பில் 2 கிலோ 150 கிராம் தங்கத்துடன் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதானவர்களுடன் டிங்கி படகு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழி மூலம் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாய் கடற்படையில் கடலோர பகுதிகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இடம்பெற்று வருகின்றனர்.

இதன்போது மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 56 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article