மன்னாரில் பிரதேச பண்பாட்டு விழாவும் கலைஞர்கள், ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு பெருவிழாவும், கலைஞர்கள் சமூக ஆர்வலர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது நானாட்டான் பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் நேற்று (நவம்பர் 3) காலை 11 மணியளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வேலாயுதம் சிவராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கல்வி அதிகாரியும், எழுத்தாளரும், ஆய்வாளருமான, திரு எஸ்.டேவிட் அவர்களும் கௌரவ விருந்தினராக நானாட்டான் கோட்டக் கல்வி அதிகாரி திரு.தி.ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Share this Article