மன்னாரில் நடைபெற்ற தேக வலுவூட்டல் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேகத்தை வலுவூட்டலும் உடலில் நோயின் எதிர்ப்பு சக்தியை கூட்டுதல் என்ற தொனிப்பொருளில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் கருத்தமர்வு ஒன்று இன்று (பெப்ரவரி 17) நடைபெற்றது.

தேக வலுவூட்டல் நிகழ்வுக்கான அநுசரனையை ரெக்ஸ்ரெச் பிரைவேட் லிமிட்டட் மேற்கொண்டிருந்தது.

இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமைபுரிவோரும் மற்றும் செயலகப் பிரிவின் கீழ் இயங்கும் விளையாட்டு கழகங்களின் வீரர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட யாவருக்கும் ரெக்ஸ்ரெச் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

Share this Article