மன்னாரில் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பும் சுகாதார கருத்தரங்கும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினால் மாணவர்களுக்கு சுகாதார சம்பந்தமான கருத்தரங்கும் 26 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு திங்கள்கிழமை (ஜூன் 12) இரணை இலுப்பைக்குளத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் இச்சங்கத்தின் செயலாளர் சிங்கிலேயர் பீற்றர் மற்றும் இதன் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச் செயல் திட்டத்தை முன்னெடுத்தனர்.

 

Share this Article