மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்தவர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலையான பெண் நெடுந்தீவை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டதுடன் யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரி எனவும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர்.
தற்போது கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்

கடந்த 13ம் திகதி மன்னார் சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது .

சடலம் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
யுவதியின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த கொலை தொடர்பான மர்மம் நீடித்து வந்த நிலையில் கொழும்பில் இருந்து மன்னாரிற்கு வந்த வஷேட புலனாய்வு அணியொன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன

சடலமாக மீட்கப்பட்ட யுவதி 21வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. பெண்ணின் சகோதரியும் இன்னொரு பெண்ணும் கொலையின் சூத்திரதாரி என சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் மேலும் சந்தேகத்தில் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட நாளில் கொலையான யுவதியினை கைதான இரண்டு பெண்களும் முச்சக்கரவண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share this Article