மன்னம்பிட்டி விபத்தால் சோகமயமான அக்கரைப்பற்று!- உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொலனறுவை மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று நேற்றுமுன்தினம்(ஜூலை 9) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

மேலும் விபத்தில் காயமடைந்த 41 பேர் மன்னம்பிட்டிய மற்றும் பொலனறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதுருவலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்தது.

அதேவேளை விபத்தில் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் அதில் 67 பேர் வரை பயணித்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Share this Article