மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்ட கொக்குத் தொடுவாயில் இன்று அகழ்வு பணிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கடந்த 29ஆம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பு வழங்குவதற்காக அகழ்வு நடவடிக்கை மேற்கொண்டபோது மனித உடல் எச்சங்களும், பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்ட நிலையில், நீதிவான் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக அகழ்வு நடவடிக்கைகள் 6ஆம் திகதி நடைபெறும் அறிவித்திருந்தார்.

Share this Article