மடுத் திருவிழாவில் விச ஜந்துக்களால் 25 பேர் பாதிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மடுத் திருவிழாவின் நவநாள்கள் நடைபெற்ற நிலையில் சுமார் 25 பேர் விச ஜந்துகளின் தீண்டலுக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரு நாள்களாக அங்கு சில மணிநேரம் பெய்த மழையால் விச ஜந்துக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிமையாலேயே விச ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவர் மடுவில் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்தார்.

மடுப் பெருந்திருவிழாவை மன்னார் கத்தோலிக்க மீடியா மூலம் நேரலையாக ஒளிபரப்பச் சென்ற நானாட்டான், புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெககநாதன் டிறோன் (வயது-28) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

Share this Article