போலி வங்கிச் சேவைகள்,நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அங்கீகரிக்கப்படாத முறையில் வைப்பு பெறலும் நிதித் தொழிலை நடாத்துதலும் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (மே 29) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் தலைமையில் காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது.

இலங்கை மத்தியவங்கி பிராந்தியத்தின் பிரதி பணிப்பாளர் எஸ் குறிஞ்சீதரன், சிரேஸ்ட வளவாளராக கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார்.

பதிவு செய்யப்படாத போலி வங்கி சேவைகள், நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பிலும் அர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியிலுள்ள மக்களை கடன் திட்டங்கள் மூலம் ஈர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டவிரோத அனுமதிக்கப்படாத நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள் ஆகியோர் எனப் கலந்து கொண்டனர்.

Share this Article