போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு என்பவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம் இன்று (மார்ச் 14) மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மீளாய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அவற்றுக்கான தீர்வுகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறை சார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Share this Article