போக்குவரத்து பொலிஸாரை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வவுனியாவில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று (ஜூலை 16) இரவு இடம்பெற்றது.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வீதிக் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாஸார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை வீதியின் குறுக்காக சென்று வழிமறித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் போக்குவரத்து பொலிஸாருடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article