பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவிலும் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றது.

தமிழ் நாட்காட்டியின் பிரகாரம் வருகின்ற முதல் நாள் தைப்பொங்கல் தினத்தன்று ஆதவனுக்கும் தொழிலாளா்களுக்கம் நன்றி செலுத்தும் முகமாக தமிழா்கள் தைப் பொங்கல் நிகழ்வுகளினை நடாத்தி வருகின்றாா்கள்.

இதன் பிரகாரம் தமிழ் கலண்டா் பிரகாரம் இன்றை முதலாவது அலுவலக நாளில் பாடசாலைகள் தினைணக்களங்கள் தொழில் ஸ்தாபனங்களில் சுயதொழில் நிலையங்களிலும் பொங்கல் நிகழ்வுகளினை மேற்கொண்டு நன்றி தொிவிப்பதோடு எதிா்காலங்களில் மகிழ்சி வேண்டி செய்தொழில் கல்வி சிறக்க பொங்கல் நிகழ்வுகளினை மேற்கொள்வது தமிழா் பண்பாடு

அதன் அடிப்படையில் இன்றைய தினம் நெடுதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளா் திரு.எவ.சி.சத்தியசோதி அவா்களது தலமையில் மிக சிறப்பாக பொங்கல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் நெடுந்தீவு கிழக்கு சுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை அதிபா் திருமதி.வ.தேவதாஸ் அவா்களது தலமையில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

Share this Article