பெண் வைத்தியரின் கடமைக்கு இடையூறு – கனடா பிரஜை அனலைதீவில் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அனலைதீவு வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன், வைத்தியசாலை தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் அனலைதீவைப் பிறப்பிடமானக் கொண்ட கனேடியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரு பொலிஸாருடன் வைத்தியசாலைக்குச் சென்றார் என்றும், அங்கு பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன், தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை நிர்வாகம் முறைப்பாடு  செய்ததுடன், ஆதாரமாக வைத்தியசாலையின் சிசிரிவி கமராப் பதிவுகளையும் கையளித்தது. அதன் அடிப்படையில் கனேடியப் பிரஜை கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, சந்தேகநபருடன் இரு பொலிஸாரும் வைத்தியசாலைக்குச் சென்றனர் என்று கூறப்படும் நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article