பெண் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உற்பத்தி சார் பயிற்சி நெறி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு மெசிடோ  நிறுவனத்தின் ஏற்பாட்டில் சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறி வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 40  பெண் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு முழங்காவில் பொது மண்டபத்தில் வெள்ளிக்கிழமை குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த தொழில் பயிற்சியில்  இலங்கை கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது அவர்களினால் 6 உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

மேலும் யாழ் தீவக பெண்களை உள்ளடக்கி தெரிவு செய்யப்பட்ட 40 பெண்களுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை(ஏப்ரல் 29) யாழ் வேலனை பிரதேச செயலகத்தில் குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த தொழில் பயிற்சியில்  இலங்கை கைத்தொழில் சபையின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த 06 உற்பத்தி சார் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


இதன் போது பயிற்சி யாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட சுய தொழில் உற்பத்தி பொருட்கள் வருகை தந்த பிரமுகர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டன.

Share this Article