புலிகளின் துப்பாக்கிகள் முல்லைத்தீவில் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து துப்பாக்கிகள் நேற்றுமுன்தினம் (ஜனவரி 18) மீட்கப்பட்டுள்ளன.

அந்தக் காணியில் கிணறு வெட்டியபோதே துப்பாக்கிகள் வெளித் தென்பட்டுள்ளன.

இது தொடர்பாக மக்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கிய தகவலையடுத்து சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.

ரி-56 ரகத் துப்பாக்கியும், கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. அவை தற்போது முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

Share this Article