புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வைத்தியசாலையின் அனுசரணையுடன் இன்று(ஜூலை 27) காலை 9.00 மணிக்கு இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த் தலைமையில் மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஆகியோர் இந்த நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.

புதிதாக அமைக்கப்பட்ட நலன்புரிச் சங்கத்தின் முதற்கட்ட இர‌த்த தான நடவடிக்கையில் உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article